கரைதுறைப்பற்று பிரதேச சபை புதிய தவிசாளர் தேர்வு; கூட்டமைப்பினர் இரகசிய கலந்துரையாடல் | தினகரன்

கரைதுறைப்பற்று பிரதேச சபை புதிய தவிசாளர் தேர்வு; கூட்டமைப்பினர் இரகசிய கலந்துரையாடல்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அது தொடர்பிலான இரகசிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த இரகசிய கலந்துரையாடலானது நேற்று முன்தினம் முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக பதவிவகித்தார்.  

இந் நிலையில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக, கடந்த 18.03.2013,அவர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.அந்த வகையில் குறித்த பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு இன்று இடம்பெறும்.  

விஜயரத்தினம் சரவணன்    


Add new comment

Or log in with...