பூகோள வெப்பமடைதல்: ஐ.நா கடும் எச்சரிக்கை | தினகரன்

பூகோள வெப்பமடைதல்: ஐ.நா கடும் எச்சரிக்கை

உலக வெப்பத்தைக் குறைப்பதில் காலம் கடந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாட்டுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக வெப்பத்தைக் குறைக்கும் திட்டங்களைச் “செயல்படுத்தும் ஆண்டாக” இந்த ஆண்டு இருப்பது கட்டாயம் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோணியோ குட்டரெஸ் வலியுறுத்தினார்.

உலக வெப்பமயமாதல் குறித்த நிறுவனத்தின் அறிக்கை, அச்சமூட்டுகிறது என்று அவர் வர்ணித்தார். வெற்றியா? தோல்வியா? என்பதைத் தீர்மானிக்கும் ஆண்டு இதுவென்றும் அவர் கூறினார்.

இயற்கை மீது போர் தொடுக்கும் தற்கொலைத்தனமான போக்கிலிருந்து திசைமாறும் சாத்தியம் உள்ளது. அதை, இந்த ஆண்டு தவறவிடுவது மாபெரும் தவறாக முடியும் என்றார் குட்டரெஸ்.

அமெரிக்கா, 2030ஆம் ஆண்டுக்குள் தனது வெப்பவாயு வெளியீட்டைக் குறைந்தது பாதியாகக் குறைக்க, உறுதி கொள்ள வேண்டுமென்று தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

அவ்வாறு செய்தால், வெப்பவாயுக்களை அதிகம் வெளியிடும் மற்ற நாடுகளும் அதேபோல் செய்ய முன்வரும் என்றார் அவர்.


Add new comment

Or log in with...