றைஸ்டார் பைட்டர் அணி சம்பியன் | தினகரன்

றைஸ்டார் பைட்டர் அணி சம்பியன்

பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் காற்பந்து அணிக்கான புதிய சீருடை அறிமுகமும் சினேகபூர்வ உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஆறு அணிகள் பங்குபற்றிய சினேகபூர்வ உதைபாந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு றைஸ்டார் லோட்டஸ் அணியும் றைஸ்டார் பைட்டர் அணியும் தெரிவாகியிருந்தன. இதில் றைஸ்டார் பைட்டர் அணியினர் றைஸ்டார் லோட்டஸ் அணியினரை 0 க்கு 3 கோல்கள் என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு 2021 றைஸ்டார் சினேகபூர்வ வெற்றிக் கிண்ணத்தை றைஸ்டார் பைட்டர் அணி தனதாக்கி கொண்டது.

பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தித்திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் றிசாட் சரீப் பிரதம அதிதியாகவும், தொழிலதிபரும் மின்ஹத் ஜுவல் ஹவுஸ் உரிமையாருமான கே.எல்.ஜிப்ரி கௌரவ அதிதியாகவும், பாலமுனை றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஆலோசகர்களான பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய அதிபர் கே.எல்.உபைதுள்ளா, கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.இப்றாஹிம், பாலமுனை பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் எம்.ரீ.செவ்பட் அல்பி, அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளர் எம்.எப்.பர்ஹான், டீ.லிங் நிறுவன முகாமையாளர் ஏ.எல்.றனீஸ், கழகத்தின் முன்னாள் தலைவர்களான எம்.எப்.பர்சாத், எம்.ஐ.அப்துல் மனாப், கழகத்தின் செயலாளர் சட்டமாணி அஸ்ரி ஆசாம், பொருளாளர் ஏ.எல்.றிஸ்மி, உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...