மின்னொளியில் கரப்பந்தாட்டப் போட்டி | தினகரன்

மின்னொளியில் கரப்பந்தாட்டப் போட்டி

மூதூர் சந்தோஷபுரம் ஒலி ஒளி விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டி கடந்த (17)சனிக்கிழமை இரவு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பசுமைவனம் அனுசரணை வழங்கியிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வில் மரண மாகிய Green kalam அமைப்பின் செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலரும் பல் துறை கலைஞருமான நடிகர் விவேக் அவர்களை நினைவு கூரும் வகையில் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் 200 மாமரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்


Add new comment

Or log in with...