வீட்டுப் பாவனைக்கான லிற்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

lito premium hybrid gas cylinder அறிமுகம்

உலகின் இயற்கை சக்தி முதல்களை தேவைகளுக்குப் பயன்படுத்துவதில் உலக சமூகம் அக்கறை காட்டி வருகிறது. அதற்கான தீர்வாக நவீன முறைகளை பயன்படுத்தி புதிய உற்பத்திகளை அறிமுகம் செய்ய பல துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய வழங்குனர்களாக 150 வருட கால உரிமையையுடைய லிற்ரோ காஸ் லங்கா நிறுவனம் பாவனையாளர்களின் தேவைக்காக புதிய தீர்வை பெற்றுக் கொடுக்க எப்போதும் செயல்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான அனில் கொஸ்வத்தை கூறினார்.

அதிகரித்து வரும் பாவனையாளர் தேவைக்கு முன்னுரிமை வழங்கி எரிவாயுவுக்கான விசேட தீர்வாக 18 லீற்றர் கொண்ட பிரீமியம் ஹைபிரைட் சிலிண்டரை இலங்கைக்கு அறிமுகம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சிலிண்டர் உலகளாவிய சுத்திகரிப்புக்கு இணைந்ததாக உள்ளதோடு பொருளாதார நன்மையையும் பெற்றுக் கொடுத்து இலங்கையில் LPG துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

1,395.00 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் 18 லீற்றர் லிற்ரோ பிரீமியம் ஹைபிரைட் சிலிண்டர் நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு போதுமானது என நிறுவனம் கூறுகிறது.

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டல் மற்றும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின்படி எரிவாயு விலையை நிலையாக ஒரு வருட காலமாக வைத்திருந்ததால் பாவனையாளர்கள் பெரும் பயனடைந்தார்கள். அதே போன்று எமது புதிய உற்பத்தியும் வாக்குறுதிக்கு பெறுமதி சேர்க்கும் என நாம் நம்புகிறோம். 75வீதம் அதிகமான சந்தையை பெற்று தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையின் தொழிற்துறையை உலகளாவிய எரிசக்தி தரத்திற்கு ஏற்றதாக மாற்றுவதும் மற்றும் எமது எல்லா நடவடிக்கைகளினதும் பாதுகாப்பை உறுதிபடுத்தல், பானையாளர்களின் பணத்துக்கான பெறுமதியை உறுதி செய்தல் ஆகியனவே எமது நோக்கம்" என அவர் தெரிவித்தார்.

தற்போது 18 லீற்றர் லிற்றோ புதிய பிரீமியம் ஹைபிரைட் சிலிண்டர் உலகளாவிய தரத்தில் சந்தைக்கு வரவுள்ளது. இந்த சிலிண்டரின் பாதுகாப்பு குறித்து கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் சூழல் தொடர்பான பணிப்பானர் ஜயந்த பஸ்நாயக்க "இந்த சிலிண்டரில் LPG யை ஆவியாக்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதால் கொண்டு செல்வது இலகுவாகும்.

ஐரோப்பிய சங்கத்தின்(90/269) விதியின்படி நபரொருவர் சுமக்கக் கூடிய நிறையின் அளவு 25 கிலோ கிராம். அதன்படி இந்த சிலிண்டரை கையாள்வது இலகுவாகும்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் செயற்பாடு பணிப்பாளர் கமல் விக்கிரமசிங்க "இந்த சிலிண்டரை வேகமாக நிரப்ப முடியும் என்பதால் பாவனையாளர்களின் தேவையை விரைவாக பூர்த்தி செய்ய முடியும்" எனக் கூறினார்.

எரிசக்தி துறையில் உலகளாவிய சக்தி மூலங்களை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் வலுவான பன்னாட்டு பாரம்பரியம் எமக்குள்ளது என நிறுவனத்தின் விறபனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரன கூறினார்.

லிற்ரோ காஸ் நாடு பூராவும் வலுவான விநியோக சேவையை தொடர்ந்து நடத்தி வருகிறது. 42 விநியோக பிரதிநிதிகள், 1500 விற்பனைப் பிரதிநிதிகள் 14,000 (வீடுகளுக்கு விநியோகிக்கும் செயலி) ஊடாக வாடிக்கையாளர்கள், கைத்தொழில் மற்றும் திட்டங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய தடையின்றி விநியோகம் நடைபெறுகிறது.

வயலட்...


Add new comment

Or log in with...