அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்-A Chinese Ship Carrying Radioactive Material Docked In Hambantota Port Due to a Fault

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் வந்த சீன கப்பலை அங்கிருந்து விரைவாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அறிவித்துள்ளது.

கோளாறு காரணமாக நேற்று (20) இரவு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு குறித்த கப்பல் நுழைந்ததாகவும், தற்போதுவரை துறைமுகத்திற்கு வெளியே குறித்த கப்பல் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன கப்பல், சீன அணுசக்தி வலு உற்பத்தி நிலையத்திற்கான யுரேனியத்தை கொண்டு செல்வதாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கதிரியக்க பொருட்களுடன் கப்பலொன்று வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது பற்றி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...