பாகிஸ்தான் இஸ்லாமியவாதிகள் - பொலிஸாரிடையே மோதல்

பாகிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரான லாஹூரில் அண்மையில் தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாத கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

முஹமது நபியின் கேலிச்சித்திரம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி தற்காத்து பேசியது தொடர்பில் அந்நாட்டு தூதுவரை நாடுகடத்தக் கோரிவந்த தஹ்ரீக்கே லப்பைக் பாகிஸ்தான் கட்சிக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தக் கட்சி ஆதரவாளர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, பொலிஸ் அதிகாரிகளை கடத்திச் சென்றதோடு, 50,000 லீற்றர் எரிபொருள் தாங்கி ஒன்றை களவாடியது தொடர்பிலேயே பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது.

“ஆயுதமேந்திய குற்றவாளிகள் வனத்துறை அதிகாரிகள் அல்லது பொலிஸார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்” என்று பஞ்சாப் மாநில பொலிஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் பிரான்ஸ் பிரஜைகள் பாகிஸ்தானை விட்டு தற்காலிகமாக வெளியேறும்படி பிரான்ஸ் அரசு கடந்த வாரம் கேட்டுக்கொண்டது.


Add new comment

Or log in with...