டைட்டன்ஸ் அணி சம்பியன் | தினகரன்

டைட்டன்ஸ் அணி சம்பியன்

கிண்ணியா கிரிக்கட் சபை யினால் நடத்தப்பட்ட ரீ 20 கிரிக்கெட் இறுதிப் சுற்றுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) பைசல் நகர் அல் இர்பான் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இவ் இறுதிப் போட்டி டைட்டன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் கிண்ணியன்ஸ் விளையாட்டு கழங்களுக்கிடையே நடைபெற்று டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று பணப்பரிசில்களையும் வெற்றிக்கிண்ணத்தினையும் கைப்பற்றியது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா பிரதேச சபைத் தலைவர் கே.எம். நிகார், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி, கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான ஏ.எம் கலிபத்துல்லா, சட்டத்தரணி எம். றாபி, எச். நிஹால், விளையாட்டு அதிகாரி எச்.எம். அதீக், உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்


Add new comment

Or log in with...