எரிவாயு விலையில் மாற்றமில்லை | தினகரன்

எரிவாயு விலையில் மாற்றமில்லை

சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அளகியவன்ன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 1493 விற்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 597 விற்கும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 298 விற்கும் விற்கப்படும் எனவும் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் நிதி அமைச்சு,வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை என்பவற்றிடம் வேண்டுகோள்விடுத்துள்ளன. இலங்கையின் முன்னணி எரிவாயு நிறுவனங்களான லாஃப் மற்றும் செல் கேஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரிகளை 1,501 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன.


Add new comment

Or log in with...