காற்றின் மூலம் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச்  சேர்ந்த 6 வல்லுநர்கள் ஒரு முழுமையான ஆய்வு  செய்தனர், காற்றின் மூலம் கொரோனா வைரஸ்  ஒரு நபரை வேகமாக பாதிப்பது தெரியவந்துள்ளது

கொரோனா வைரஸ் காற்றின் மூலம்தான் வேகமாகப் பரவுகிறது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒருவர் சுவாசிக்கும்போது, ​​பேசும்போது, ​​கத்தும்போது, ​​பாடும் போது அல்லது தும்மும் போது வைரஸை காற்றின் மூலம் உள்ளிழுக்கும்போது பாதிப்படைகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவ இதழான லான்செட் "கொரோனா வைரஸ் காற்று வழியாக வேகமாக பரவுகிறது. அதனால்தான் இந்த வைரஸுக்கு முன்னால் அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வசதிகள் தோல்வியடைந்து வருகின்றன" என்று கூறியுள்ளது.

சுமார் 3 நாடுகளைச் சேர்ந்த 6 வல்லுநர்கள் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு இதனை உறுதி செய்துள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 6 வல்லுநர்கள் ஒரு முழுமையான ஆய்வு செய்தனர், காற்றின் மூலம் கொரோனா வைரஸ் ஒரு நபரை வேகமாக பாதிப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவது குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் சுவாசிக்கும் போது, ​​பேசும்போது, ​​கத்தும்போது, ​​பாடும்போது அல்லது தும்மும்போது வைரஸை காற்றின் மூலம் உள்ளிழுக்கும்போது பாதிப்படைகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே காற்றோட்டம் தொடர்பான நடவடிக்கையில் மிகுந்த கட்டுப்பாடு தேவை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கூட்டத்தை குறைத்தல், முகக்கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்த ஆய்வைச் சரிபார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...