விசேட தேவைகளையுடைய பிள்ளைகள் பங்கேற்புடன் 'துருமித்துரு' மரநடுகை

தேசிய மர நடுகை திட்டத்துக்கு இணைந்ததாக விங்ஸ் லங்கா அமைப்பு மாத்தறை,வெலிகமவில் விசேட தேவைகளையுடைய பிள்ளைகளை இணைத்துக் கொண்டு 'துரு-மித்துரு' என்னும் பெயரில் மரநடுகை திட்டம் ஒன்றை செயல்படுத்தியது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி சனிக்கிழமை மாத்தறை சுதர்சனாராம விஹாரையில் விசேட தேவைகளையுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோரின் பங்களிப்புடன் நடைபெற்றது. மரநடுகை திட்டத்துக்கு விசேட தேவைகளுடைய பிள்ளைகளை முதற் தடவையாக பங்கெடுக்க செய்தமை வரலாற்றிலேயே புதிய அனுபவமாகும்.

மரங்களை நேசிக்கவும், மரங்களிடமிருந்து அன்பைப் பெறவும் விசேட தேவைகளை உடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நேக்கமாகும். சமூகத்துக்கு மற்றும் தமது குடும்பத்துக்கு இந்தப் பிள்ளைகள் விசேட பாரமும் பொறுப்பும் என்ற கருத்திலிருந்து விடுபட்டு, அவர்களுக்கும் சமூகப் பொறுப்பை ஏற்படுத்துவதே 'துரு-மித்துரு' திட்டத்தின் இன்னுமொரு இலக்காகும்.    சிக்கலான பல சமூகப் பிச்சினைகளை அர்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தல், சூழலுக்கு மாத்திரமன்றி விசேட தேவைகளையுடைய பிள்ளைகளின் வாழ்வுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதாகவும் அமையும்.     விங்ஸ் லங்கா அமைப்பானது பல்கலைகழக மற்றும் நிர்வாக செயலணி சபை அங்கத்தவர்கள், தொழில் வல்லுனர்கள் இணைந்து உருவாக்கிய தொண்டர் அமைப்பாகும்.

'துரு-மித்துரு' மரநடுகை திட்டத்தின் கீழ் விசேட தேவைகளையுடைய அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொரு பழமரக் கன்றுகள் பெற்று கொடுக்கப்பட்டது.    ஏப்ரல் மாதம் 16ம் திகதி காலை 06:40 மணியளவிலான சுபநேரத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் தங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகளை நடுகை செய்து தேசிய மர நடுகை திட்டத்தில்இணைந்து கொண்டார்கள்.


Add new comment

Or log in with...