எவ்வித மே தின பேரணிகள், கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானம் | தினகரன்

எவ்வித மே தின பேரணிகள், கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானம்

எவ்வித மே தின பேரணிகள், கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானம்-No May Day Rally-May Day Meetings-Decided at Party Representative Meeting-NOCPC

- சர்வ கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு

எந்தவொரு மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொவிட-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (20) கொவிட-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளினதும் பிரதிகளுடனான சந்திப்பின் போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட-19 மீண்டுமொரு முறை வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதனைக் கருத்திற்கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கடந்து கொண்டதோடு, இதன்போது எந்தவொரு மே தின பேரணிகள், கூட்டங்களையும் நடத்தாதிருக்கு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை, தமது கட்சியின் மே தினக் கூட்டத்தை கொழும்பில் நடாத்துவதற்கு கட்சிக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...