துப்பாக்கிச் சூட்டில் இறந்த இலங்கையரின் சடலம் விமானம் மூலம் நாட்டுக்கு | தினகரன்

துப்பாக்கிச் சூட்டில் இறந்த இலங்கையரின் சடலம் விமானம் மூலம் நாட்டுக்கு

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் கூடிய சடலம் ஒன்று துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.  

32வயதுடைய கம்பஹா, நெதுன்கம பகுதியை சேர்ந்த நபரின் சடலம் நேற்று முன்தினம்(18) மாலை கொண்டுவரப்பட்டுள்ளது.  

இறந்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நபர் கடமையாற்றிய நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் அவர் உயிரிழந்ததையடுத்து அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 


Add new comment

Or log in with...