நிலவுக்கு செல்லும் விண்கலத்தை தயாரிக்க ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தேர்வு

இந்தத் தசாப்தத்தில் மனிதன் நிலவுக்குத் திரும்புவதற்கான விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தை செயற்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஆர்டமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்கு அடுத்த மனிதன் மற்றும் முதல் பெண்ணை எடுத்துச் செல்லும் வாகனம் இதன்மூலம் உருவாக்கப்படவுள்ளது. வெள்ளை இனத்தவர் அல்லாத முதலாமவரை நிலவில் தரையிறக்கவும் இந்தத் திட்டம் இலக்கு வைத்துள்ளது.

இதன்படி ஸ்பேஸ் எக்ஸின்

ஸ்டார்சிப் கலத்தை அடிப்படையாகக் கொண்டு தெற்கு டெக்சாசில் உள்ள தளத்தில் இந்த விண்கலம் சோதிக்கப்படவுள்ளது.

இதற்காக எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதி 2.89 பில்லியன் டொலர்களாகும். இதற்கு அந்த நிறுவனம் அமேசன் நிறுவனர் ஜெப் பெசோசின் நிறுவனம், அலபாமாவைச் சேர்ந்த டைனடிக்ஸ் நிறுவனங்களுடன் போட்டியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளது. ஆர்டமிஸ் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப திட்டமிடப்பட்டபோதும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அது கடினமான இலக்காக மாறியுள்ளது.


Add new comment

Or log in with...