பிலிப்பைன்ஸில் பெருமளவு பெரிய சிப்பிகள் பறிமுதல் | தினகரன்

பிலிப்பைன்ஸில் பெருமளவு பெரிய சிப்பிகள் பறிமுதல்

பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட சுமார் 200 தொன் பெரிய சிப்பிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் 25 மில்லியன் டொலர்களாகும்.

பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட மிகப் பெரிய சோதனைகளில் சிப்பிகள் கைப்பற்றப்பட்டன. மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

முற்றிலும் அழிந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கும் பெரிய சிப்பிகளின் சட்டவிரோத விற்பனை அதிகரித்துள்ளதாகச் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

யானைத் தந்தங்களின் வர்த்தகம் உலகெங்கும் முடக்கப்பட்டு வரும் நிலையில் அதற்குப் பதிலாகப் பெரிய சிப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பெரிய சிப்பி வகைகள் பிலிப்பைன்ஸில் தான் உள்ளன. இயற்கை வாழ்விடத்திலிருந்து அவற்றைப் பறித்துச் செல்வதால், கடல் பல்லுயிர்ச் சூழல் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகிறது. அதனால், எதிர்காலத் தலைமுறையினர் அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மைகளை இழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


Add new comment

Or log in with...