ரஷீட் கானுடன் நோன்பு நோற்ற டேவிட் வோனர், கேன் வில்லியம்சன் | தினகரன்

ரஷீட் கானுடன் நோன்பு நோற்ற டேவிட் வோனர், கேன் வில்லியம்சன்

ரஷீட் கானுடன் நோன்பு நோற்ற டேவிட் வோனர், கேன் வில்லியம்சன்-Kane Williamson, David Warner Fasting along with Rashid Khan

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீட் கானுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோனர் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் நோன்பு நோற்றுள்ளனர்.

ரமழான் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது இடம்பெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் வீரர்களான ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் நோன்பு நோற்று வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுடன் இணைந்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரான டேவிட் வோனர் மற்றும் நியூஸிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் ஆகியோர் நேற்றையதினம் நோன்பு நோற்றுள்ளனர்.

குறித்த மூவரும் நோன்பு திறப்பதற்காக காத்திருக்கும் வேளையில் எடுத்த வீடியோ ஒன்றை ரஷீட் கான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் (Story) வெளியிட்டுள்ளார்.

உங்கள் அனுபவத்தை பகிருங்கள் என ரஷீட் கான் கோருகிறார்.

அதற்கு, டேவிட் வோனர் "நல்லம். ஆனால் எனக்கு மிகவும் தாகமாகவும், அதிக பசியாகவும் உள்ளது. எனது வாய் உலர்ந்து போயுள்ளது. மிகவும் கஷ்டமான விடயம்" எனத் தெரிவிக்கிறார்.

"மிகவும் நல்லம். நன்றி" என கேன் வில்லியம்ஸன் தெரிவிக்கிறார்.

இதன் போது, இரு ஜாம்பவான்களும் எங்களுடன் இன்று நோன்பு நோற்றுள்ளனர். இந்த மேசையில் உங்களுடன் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என ரஷீட் கான் தெரிவிக்கிறார்.

தற்போது இடம்பெற்று வரும் IPL தொடரில், சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...