மே முதல் வாரத்திலிருந்து 2ஆவது டோஸ் தடுப்பூசி | தினகரன்

மே முதல் வாரத்திலிருந்து 2ஆவது டோஸ் தடுப்பூசி

மே முதல் வாரத்திலிருந்து 2ஆவது டோஸ் தடுப்பூசி-COVID19 2nd Dose Will be Issued From May 1st Week-Channa Jayasumana

- 925,242 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது

கொவிட்-19 நோய்க்கு எதிரான அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்/மாத்திரையை எதிர்வரும் மே மாதம் முதலாவது வாரத்திலிருந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, இதற்காக ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.

அதற்கமைய, கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வரை 925,642 பேருக்கு இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இம்மாதம் 23ஆம் திகதி முதல் வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...