நீர் மானியை இலங்கையிலேயே தயாரிக்க முடிவு | தினகரன்

நீர் மானியை இலங்கையிலேயே தயாரிக்க முடிவு

தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு மூலம்  வழங்கப்படும் நீர் இணைப்புகளுக்கான நீர் மானியை எதிர் காலத்தில் நீர்  வழங்கல் சபையின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மூலம் தயாரிக்க  நடவடிக்கை எடுக்குமாறு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நீர்  வழங்கல் சபைக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்.  

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் இரத்மலானை  மத்திய இயந்திர கூடத்தை கண்காணிக்கும் விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே அவர்  இந்த ஆலோசனையை வழங்கினார். 

சாதாரண வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பெற்றுக்  கொடுக்கப்பட்டுள்ள நீர் மானிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவை அநேகமாக  ஒரு வருடத்துக்குள் பல காரணங்களால் செயலிழப்பதை காணக்கூடியதாக உள்ளது.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றை திருத்துவதற்கான வசதி இருந்தும் வெள்நாட்டிலிருந்து தருவிக்கப்படும் மானிகளே பாவிக்கப்படுகின்றன.  

இதனை உடனடியாக நிறுத்துமாறும் தேவையான உதிரிப்பாகங்களை  உள்ளுரிலேயே தயாரித்து எமது தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் திருத்தி அவற்றை  பாவிக்குமாறு அமைச்சர் அறிவித்தார். 

 


Add new comment

Or log in with...