இராணுவத்தினரை மோதிய மரக் கடத்தல் வாகனம் விபத்து | தினகரன்

இராணுவத்தினரை மோதிய மரக் கடத்தல் வாகனம் விபத்து

இராணுவத்தினரை மோதிய மரக் கடத்தல் வாகனம் விபத்து-Cab Accident While Transporting Illegal Timber-2 Suspect Escaped

- இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
- காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, ஓமந்தை வீதித் தடை சோதனையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது வாகனத்தை செலுத்தி, காயமேற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இருவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரை மோதிய மரக் கடத்தல் வாகனம் விபத்து-Cab Accident While Transporting Illegal Timber-2 Suspect Escaped

மரங்களை ஏற்றிய கெப் ரக வாகனமொன்று, இராணுவத்தினரால் நிறுத்துமாறு சமிக்ஞை விடுக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் மீது மோதி, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த வேளையில், குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் சாரதி மற்றும் அவரது உதவியாளரே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரை மோதிய மரக் கடத்தல் வாகனம் விபத்து-Cab Accident While Transporting Illegal Timber-2 Suspect Escaped

இச்சம்பவத்தில் காயமடைந்த இரு இராணுவ வீரர்களும் சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ய பொலிசாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரை மோதிய மரக் கடத்தல் வாகனம் விபத்து-Cab Accident While Transporting Illegal Timber-2 Suspect Escaped

Add new comment

Or log in with...