இலை மேல் இறைச்சி வளரும் தொழில்நுட்பம் | தினகரன்

இலை மேல் இறைச்சி வளரும் தொழில்நுட்பம்

இறைச்சிக்காக விலங்குகளை பண்ணையில் வளர்ப்பதற்கு மாற்று வழிகள் இல்லையா? இருக்கிறது.

இறைச்சியின் செல்களை ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கும், 'செல் வேளாண்மை' அவற்றில் ஒன்று. கிண்ணியில் வளரும் செல்கள், கறியாகத் திரண்டு வர, சாரம் போன்ற அமைப்பு தேவை. அதற்கு பசலைக் கீரை இலையை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஏற்கனவே மனித இதயத் திசுக்களை வளர்க்க இந்த முறை பயன்பட்டுள்ளது. என்றாலும், அந்த முறையைக் கண்டறிந்த அமெரிக்காவின் பாஸ்டன் கல்லுாரி விஞ்ஞானிகள், இந்தத் தடவை, அதை மாட்டிறைச்சி வளர்ப்பதற்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

பசலி இலையிலுள்ள புடைத்த நரம்பு அமைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, அதிலுள்ள பிற நிறமிகள், செல்களை நீக்கிவிடுகின்றனர் விஞ்ஞானிகள். பிறகு, மாட்டிறைச்சியின் செல்களை வெளிறிய பசலை இலை மீது வைத்து வளர்க்கின்றனர்.

இப்படி முதல் முறையாக வளர்க்கப்பட்ட மாட்டிறைச்சி செல்கள், 14 நாட்களுக்கு பல்கிப் பெருகியது.

இந்த ஆய்வை மேலும் தொடர்ந்து, இறைச்சி வளர்ச்சிக் காலத்தை அதிகரிக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். இதற்கு வேறு தாவரங்கள் உதவுமா என்றும் அவர்கள் ஆராய்கின்றனர். ஆய்வகத்தில் வளரும் இறைச்சிக்கு, ஏற்கனவே வரவேற்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 Glenn Gaudette, a professor at Worcester Polytechnic Institute in Massachusetts is attempting to grow cow muscle cells on spinach leaves.


Add new comment

Or log in with...