நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி

நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி-2 Children Drown to Death Thambalagamuwa-Paravipanchan

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி-2 Children Drown to Death Thambalagamuwa-Paravipanchan

இவ்வனர்த்தம் இன்று (18) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை, ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (13) மற்றும் முள்ளிப்பொத்தானை 95 ஐச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கர் (13) எனவும் தெரியவருகின்றது.

நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி-2 Children Drown to Death Thambalagamuwa-Paravipanchan

நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிபாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி-2 Children Drown to Death Thambalagamuwa-Paravipanchan

இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய குறித்த சிறுவர்கள் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி-2 Children Drown to Death Thambalagamuwa-Paravipanchan

உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோன்புடன் நீராடச் சென்ற பதின்ம வயது சிறுவர்கள் இருவர் பலி-2 Children Drown to Death Thambalagamuwa-Paravipanchan

(ரொட்டவெவ குறுர்ப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - அப்துல் ஹலீம்)

Add new comment

Or log in with...