நக்கீரன் மகளின் இரு நூல்கள் வெளியீடு | தினகரன்

நக்கீரன் மகளின் இரு நூல்கள் வெளியீடு

மகுடம் பதிப்பக வெளியீடுகளான டென்மார்க் நக்கீரன்மகளின் ஆழக்கீறல் சிறுகதைத்தொகுப்பு, தேவதைமீட்டிய யாழ் கவிதைத்தொகுப்பு ஆகிய இரு நூல்களின் Zoom மூலமான வெளியீட்டு விழா ஏப்ரல் 18 மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி அகுஸ்தின் நவரட்ணம் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக பேராசிரியர். செ. யோகராசாவும் சிறப்பதிதியாக பேராசிரியர் பாலசுகுமாரும் (லண்டன்) கலந்து கொள்ளவுள்ளனர்.

நூல் வெளியீட்டுரையை மகுடம் வி. மைக்கல் கொலினும் சிறுகதைநூல்விமர்சனத்தை டென்மார்க் எழுத்தாளர் ஜீவகுமாரனும் எழுத்தாளர் மண்டூர் அசோகாவும் கவிதைநூல்விமர்சனத்தை எழுத்தாளர் ச. மணிசேகரன் மற்றும் டென்மார்க் எழுத்தாளர் கே.எஸ்.துரையும் ஆற்றவுள்ளனர்.

சிறப்புரையை சிறுகதை மஞ்சரி ஆசிரியர் லண்டன் எழுத்தாளர் மு. தயாளனும் கருத்துரைகளை கவிஞர் மேமன்கவி, அருணா சுந்தரராசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை கவிஞர் கங்கைமகள், எழுத்தாளர் இணுவையூர் சக்திதாசன், எழுத்தாளர் குடத்தனை உதயன், எழுத்தாளர் தீபதிலகை கவிஞர் அவதானி ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

ஏற்புரையை நூலாசிரியர் நக்கீரன் மகளும் நன்றியரையை றொபேட் கெனடியும் நிகழ்த்துவர். பின்வரும் சூம் எண்கள் மூலம் நிகழ்வில் இணைந்து கொள்ள முடியும். Zoom ID - 817 4577 1670


Add new comment

Or log in with...