கொரோனா நோயாளர்களுக்கு பிரேசிலில் மருந்து தட்டுப்பாடு

பிரேசிலில் உள்ள மருத்துவமனைகளில் கொவிட்–19 நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் உடனடி இறக்குமதிக்கு அந்நாட்டு அரசாங்கம் ஏற்பாடுசெய்து வருகிறது.

முறையான மயக்க மருந்து செலுத்தப்படாமல் மோசமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவையான மருந்து குறித்து ஸ்பெயின் உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாக பிரேசிலின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கான பிராணவாயு விநியோகத்திலும் பற்றாக்குறை நிலவுவதாக அவர் கூறினார்.

பிரேசிலில் கொவிட்–19 நோயால் சுமார் 362,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

எந்த நாட்டிலும் இல்லாத எண்ணிக்கையாக பிரேசிலில் தினமும் வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போதைய வைரஸ் பரவல் நிலவரத்தைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள மருத்துவமனைகள் சிரமப்பட்டு வருகின்றன.

 


Add new comment

Or log in with...