சினிமாவில் விவேக் ஆசைப்பட்ட ஒன்று நடந்ததா? | தினகரன்

சினிமாவில் விவேக் ஆசைப்பட்ட ஒன்று நடந்ததா?

சினிமாவில் விவேக் ஆசைப்பட்ட ஒன்று நடந்ததா?-Vivek's Dream Acting With Kamal Haasan Comes True

நகைச்சுவை நடிகர் விவேக், தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவர் நடிகராக இருந்த இந்த 34 வருட காலத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவேயில்லை.

பல சந்தர்ப்பங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க முடியாதது பற்றி தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த 'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் விவேக். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதை படக்குழுவினர் தான் தெரிவிக்க வேண்டும்.

இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில நாட்கள் கலந்து கொண்டு விவேக் நடித்துள்ளார் என்கிறார்கள். ஆனால், கமல்ஹாசனுடன் அவருக்குக் காட்சிகள் இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அப்படியே அவர் நடித்திருந்தாலும் அதைப் பார்க்க அவரால் முடியாது என்பதும் மிகப் பெரும் சோகமே. (தினமலர்)

 

 

 


Add new comment

Or log in with...