8 வயது சிறுவன் செலுத்திய சைக்கிள் 1 1/2 வயது குழந்தை உயிரைப் பறித்தது

8 வயது சிறுவன் செலுத்திய சைக்கிள் 1 1/2 வயது குழந்தை உயிரைப் பறித்தது-One & Half Year-Old Dead-8 Year-Old Boy Ran M Cycle-Chavakachcheri

- புதுவருட தினத்தில் மட்டுவிலில் சம்பவம்

எட்டு வயதுச் சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிள் அவரது ஒன்றரை வயது தங்கையின் உயிரைப் பறித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சாவகச்சேரி, மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் புதுவருட தினமான நேற்று (14) பெரியவர்கள் எவரும் அருகில் இல்லாத சமயம் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் விளையாட்டாக இயக்கிய போது அதன் சில்லுக்குள் அகப்பட்டு ஒன்றரை வயதான சகோதரி உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மட்டுவில், சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தஸ்மிகா என்ற பச்சிளம் பாலகியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு பின்னர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(சாவகச்சேரி விசேட நிருபர் - சுபேஷ்)


Add new comment

Or log in with...