தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் கூட்டுச்சேரும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் கூட்டுச்சேரும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை-John Keells Foundation partners with National Dangerous Drugs Control Board

இலங்கையின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது வளர்ந்து வரும் கவலை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது, ஏனெனில், இது நீண்டகால போதைப்பொருள் அடிமைத்தனம், பாடசாலையை விட்டு வெளியேறுதல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை மற்றும் சமூகம் தொடர்பில் பாதகமான விளைவுகள் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூக-பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பாடசாலை பிள்ளைகளிடையே விழிப்புணர்வை உருவாக்குவது மிக முக்கியமானதாக இருந்தாலும், போதைப்பொருள் பாவனையின் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் குறித்த சரியான புரிதலுடன் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் போதைப்பொருள் தடுப்பை ஆதரிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்துடனும், குழந்தைகள் ஈடுபடுவதற்கான நிகழ்தகவு குறித்தும் சரியான புரிதலுடன் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் தயார்படுத்துவதன் மூலம் போதைப்பொருளை பயன்படுத்துபவர் போதைப்பொருள்-பயன்பாட்டு நிமித்தமான நடத்தைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் கூட்டுச்சேரும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை-John Keells Foundation partners with National Dangerous Drugs Control Board

இந்த சூழலில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சி.எஸ்.ஆர் நிறுவனமான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையானது இலங்கையில் போதைப்பொருள் நுகர்வதைத் தடுப்பதில் அரச நிறுவனத்தின் முன்னோடியாக செயல்படும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (என்.டி.டி.சி.பி); முன்னோடி திட்டத்தின் கீழ், கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த 41 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 ஆசிரியர்கள் மற்றும் 03 அதிபர்கள் மற்றும் ஸ்ரீஜெயவர்தனபுரா கல்வி வலயத்தைச் சேர்ந்த 50 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 60 ஆசிரியர்கள் மற்றும் 02 அதிபர்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் இரண்டு ஆசிரியர் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டன. இரு நிகழ்ச்சிகளும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டன.

பட்டறைகளுக்கான திறப்பு விழாவில், என்.டி.டி.சி.பி.யின் தலைவர் டாக்டர் லக்நாத் வெலகேதர, “பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையிலும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடனும், என்.டி.டி.சி.பி,   ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகம் எவ்வாறு போதைப்பொருளை தடுப்பது என்பதை கற்பிக்கும் 'ஷிக்ஷா' எனும் ஒரு தேசிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது” என உரையாற்றினார். மேலும் “சட்டவிரோதப் போதைப்பொருட்களை நிராகரித்து சரியான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவது ஆசிரியர்கள், கல்வி அமைச்சு மற்றும் நம் அனைவருக்குமான ஒரு பெரிய பொறுப்பு என்று நான் நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் விலைமதிப்பற்ற சேவையை பாராட்ட வேண்டும். இந்த திட்டம் அவர்களின் முழு நிதி உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த தகுதியான காரணிக்காக என்.டி.டி.சி.பியை ஆதரித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.” என அவர் கூறினார்.

3-நாட்கள் நடைபெற்ற ஊடாடும் பட்டறைகள் மாணவர்களின் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் காண்பது, அத்தகைய மாணவர்களைக் கையாள்வதற்கான வழிகள், எங்கு உதவியை நாடுவது மற்றும் போதைப்பொருள் பாவிக்கும் வகைகளைத் தடுப்பது போன்ற விரிவான அறிவையும் தேர்ச்சித் திறனையும் ஆசிரியர்களுக்கு வழங்கின. பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடம்; தாம் கற்றவற்றை அந்தந்த பாடசாலைகளில், உடல்நலம் மற்றும் உடற்கல்வி வகுப்புகளில் இணைக்க கட்டாயப்படுத்தப்பட்டது, பாடசலை பிள்ளைகள் மற்றும் சமூகங்களிடையே நேர்  அணுகுமுறைகளையும் மதிப்புகளையும் வளர்த்துக் கொள்ளும் நோக்கில் ஒரு ஆக்கவளமுள்ள, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதுடன், அதன் விளைவுகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நிறைவு விழாவில் பேசிய ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் செயற்பாட்டுத் தலைவர் திருமதி கார்மலின் ஜெயசூரியா, “ஆரோக்கியமான மற்றும் ஆக்கவளம் நிறைந்த சமுhயத்தை வளர்க்க, அதன் உறுப்பினர்களின் சரீரம், மனம் மற்றும் உணர்வுகளின் ஆரோக்கியத்தை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்;. போதைப்பொருள், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் எதிர்மறையான மற்றும் நீண்டகால விளைவுகளை நாங்கள் நன்கு அறிவோம். போதைப்பொருள் தாக்கங்களைத் தவிர்க்கவும் எதிர்க்கவும் எங்கள் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் ஆதரவு வழங்குவதில் ஆசிரியர்களாகிய உங்களுக்கு ஒரு தனித்துவமான பங்கு உண்டு, மேலும் “சிக்ஷா” திட்டத்தின் இறுதி இலக்குகளை அடையும் நோக்கத்திற்காக இந்த பட்டறையிலிருந்து நீங்கள் பெற்ற கற்றல்கள் மற்றும் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்;. கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியில் கொழும்பு மற்றும் ஸ்ரீஜெயவர்த்தனபுரவின் வலய கல்வி அலுவலகங்களின் ஆதரவுடன் இரண்டு வெற்றிகரமான பட்டறைகளை நடத்தியதற்காக என்.டி.டி.சி.பியை பாராட்ட இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.” எனக் கூறினார்.

கொட்டாவ தர்மபால மாஹா வித்தியாலத்தை சேர்ந்த திரு. பி.எல்.ஜி.பி. பிரியந்த “ஒரு ஆலோசனை வழங்கும் ஆசியராக, இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு எனது அறிவை புதுப்பிக்க, நான் முனைப்புடன் இருந்தேன். போதைப்பொருள் துஷ்பிரயோகம் தடுப்பு தொடர்பான திட்டங்களில் நான் ஒரு பகுதியாக இருந்துள்ளேன், ஆனால் இந்த திட்டம் முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில், இது நிபுணர்கள் ஒரு குழுவாக இணைந்மு நடத்தப்பட்ட ஒரு ஊடாடும் திட்டமாக இருந்தது. இது எங்கள் கரிசனைகளைக் குறித்து குரல் கொடுக்க ஒரு தளத்தை வழங்கியது. இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்காக என்.டி.டி.சி.பி., கல்வி அமைச்சு மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் நீங்கள் கற்பித்த விதைகளை நடவு செய்வதற்கும், மாணவர்கள் அதன் பலன்களை அறுவடை செய்வதை உறுதிசெய்வதற்காகவும் இந்த செய்தியை பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்பதை உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.” எனக் கூறினார்.

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தும் ஆறு பிரிவுகளில் ஆரோக்கியம் ஒன்றாகும் - கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (ஜே.கே.எச்) இன் சி.எஸ்.ஆர் நிறுவனம், 7 வெவ்வேறு தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் எல்எம்டி இதழால் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் 'மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்' என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. குளோபல் காம்பாக்ட்டின் பங்கேற்பாளராகவும் இருக்கும் ஜே.கே.எச் தனது சமூக பொறுப்புணர்வு பார்வையை "நாளைக்கு தேசத்தை மேம்படுத்துதல்" என்ற ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் வினையூக்கியாக செயல்படும் சமூக தொழில்முனைவோர் முயற்சியான 'பிளாஸ்டிக்சைக்கிள்' மூலமாகவும் இயக்குகிறது.


Add new comment

Or log in with...