பருவகால உற்சாகத்தை பரப்ப OPPO வின் புத்தாண்டு பாடல் | தினகரன்

பருவகால உற்சாகத்தை பரப்ப OPPO வின் புத்தாண்டு பாடல்

பருவகால உற்சாகத்தை பரப்ப OPPO வின் புத்தாண்டு பாடல்-OPPO Joins Avurudhu Cheer-Launches Music Video with Umaria

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் கையக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் வழங்குநரான OPPO, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுவருட பாடலொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO தரக்குறியீட்டின் தூதுவரும் The Voice நிகழ்ச்சியின் இசை பயிற்சியாளருமான உமாரியா சின்ஹவம்சவினால் பாடப்பட்ட இப்பாடலில், நடிகரும் பாடகருமான கயான் குணவர்தன, உள்ளிட்ட பிரபலங்களும் நடன இயக்குனர் ரமோத்மாலக மற்றும் அவரது நடன குழுவின் அழகிய நடனமும் இடம்பெற்றுள்ளன.

பருவகால உற்சாகத்தை பரப்ப OPPO வின் புத்தாண்டு பாடல்-OPPO Joins Avurudhu Cheer-Launches Music Video with Umaria

பாடலுக்கான காட்சி ஒரு அழகிய கிராமப்புறத்தை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதுடன், கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய புத்தாண்டு மரபுகளுடன் இப்பாடல் அமைந்துள்ளது. இவ்வீடியோவில் இப்பருவ காலத்தில் விற்பனையாகி வரும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரசிகர்களின் விருப்பத் தேர்வான OPPO F19 Pro வும் இடம்பெற்றுள்ளது, விற்பனையின் முதல் நாளில், F19 Pro அதன் முன்னோடியான F17 Pro வுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 200% அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பருவகால உற்சாகத்தை பரப்ப OPPO வின் புத்தாண்டு பாடல்-OPPO Joins Avurudhu Cheer-Launches Music Video with Umaria

OPPO ஶ்ரீ லங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் கூறினார்: “இத்திட்டமானது, இலங்கை கலாச்சாரத்தில் ஆழமாக மூழ்குவதற்கு எங்களுக்கு உதவியுள்ளது. இப்பருவ காலத்திற்கு உயிரூட்டும் வகையில், அதன்  அடிப்படை விடயமான உருவாதல் மற்றும் வளர்தல் என்பவற்றை முன்னிறுத்தி, OPPO ஒரே நேரத்தில் இரண்டு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 02-13 வரை ERABADU WASI மற்றும் ஏப்ரல் 05 - 18 வரை OPPO SERVICE WASI ஆகியனவே அரை இரண்டுமாகும்." என்றார்.

இப்பாடல் தொடர்பான தனது அனுபவத்தை தெரிவித்த உமாரியா சின்ஹவம்ச, “எமது இளம் மற்றும் ஆற்றல்மிக்க கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமையானது ஒரு சிறந்த அனுபவமாகும். உள்ளூர் கலாச்சாரத்தைத் தழுவியதாக இதனை உள்வாங்கியமை தொடர்பில் OPPO வினை நான் பாராட்டுகிறேன். அதுவே OPPO வை மக்கள் விரும்புவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இலங்கையர்களுக்கு OPPO உடன் மிக ஆழமான தொடர்பு உள்ளது என்பதுடன் அதன் மறுதலையும் அவ்வாறு அமைந்துள்ளது.” என்றார்.

பருவகால உற்சாகத்தை பரப்ப OPPO வின் புத்தாண்டு பாடல்-OPPO Joins Avurudhu Cheer-Launches Music Video with Umaria

இதேவேளை, இதில் பங்குபற்றிய நடிகரும் பாடகருமான கயான் குணவர்தன, OPPO உடனான தனது முதலாவது பாரிய பிரச்சாரமான இது ஒரு மறக்கமுடியாத அனுபவம் எனத் தெரிவித்தார். “இந்த திட்டத்தின் ஒரு பகுதியானமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். OPPO உடன் பணிபுரிவது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. காரணம், எமது ஆக்கப்பூர்வமான விடயங்களை மேற்கொள்வதற்கு எமக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது. இது குறிப்பாக OPPO மற்றும் F19 Pro வினை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ” என்றார்.

குறித்த வீடியோ பாலின் நடன இயக்குனரும், OPPO வின் நீண்டகால பிரபல தூதருமான ரமோத் மாலக்கா குணவர்தன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “நான் கடந்த பல ஆண்டுகளாக OPPO வுடன் பணிபுரிந்தேன். இலங்கை கலாச்சாரத்தை தழுவிக்கொள்வதில் அவர்களின் அர்ப்பணிப்பை அதில் நான் காண்கிறேன். அனைத்து இரசிகர்களுக்கும் வளமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.
2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Add new comment

Or log in with...