தலைப்பிறை இன்று தென்படவில்லை; ரமழான் ஏப்ரல் 14 ஆரம்பம்

தலைப்பிறை இன்று தென்படவில்லை; ரமழான் ஏப்ரல் 14 ஆரம்பம்-Ramazan Fasting will Begins on April 14

- கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஏப்ரல் 14ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1442 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப்பாகத்திலும் தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 14ஆம் திகதி ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

புனித ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (12) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. இதன் போதே மேற்படி தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தலைப்பிறை இன்று தென்படவில்லை; ரமழான் ஏப்ரல் 14 ஆரம்பம்-Ramazan Fasting will Begins on April 14

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் மெளலவி ரிழா மக்தூமி, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் சார்பில் அதன் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அலா அஹமட் ஆகியோரும் இத்தீர்மானத்தை அறிவித்தனர்.

இம்மாநாட்டில், உலமாக்கள், மேமன் சங்க பிரதிநிதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தரகள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஸாதிக் ஷிஹான்)


Add new comment

Or log in with...