OPPO Find X3 Pro எதிர்கால, தொழில்-முன்னணி தயாரிப்பு வடிவமைப்பிற்கு Red Dot விருது | தினகரன்

OPPO Find X3 Pro எதிர்கால, தொழில்-முன்னணி தயாரிப்பு வடிவமைப்பிற்கு Red Dot விருது

OPPO Find X3 Pro எதிர்கால, தொழில்-முன்னணி தயாரிப்பு வடிவமைப்பிற்கு Red Dot விருது-OPPO Find X3 Pro Wins Prestigious Red Dot Award for its Futuristic, Industry-Leading Product Design

பெருமைக்குரிய Red Dot: 2021ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு வடிவமைப்பு விருதை வென்றுள்ளது. உள்ளார்ந்த அம்சங்களின் உயர்நிலை, முதன்மையான ஸ்மார்ட்போனான Find X3 Pro அதன் முன்னோடியான, மனித மையம் மிக்க, ஆக்கபூர்வமான சிந்தனைக்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.

இது தொடர்பில் OPPO இன் குளோபல் மார்க்கெட்டிங் தலைவர் லீ லியு தெரிவிக்கையில், "மனிதகுலத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை OPPO வில் நாம் உருவாக்குகிறோம். தேடல் அம்சத்தில் ஆய்வின் உணர்வைத் தூண்டுவதன் மூலம், ஒவ்வொரு கணத்திலும் மேலும் அழகு சேரும் வகையில் Find X3 Pro வை வடிவமைத்தோம். இது ஒரு அழகிய கலை வேலைப்பாடாகும். அந்த வகையில் எமது முயற்சிகளுக்கு Red Dot Design விருது நடுவர்களால், எம்மை வடிவமைப்பின் சிறப்பு சர்வதேச சம்பியனாக அங்கீகரித்தமை தொடர்பில் நாம் பெருமைப்படுகிறோம். ” என்றார்.

எதிர்காலத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் அழகியலுடன் Red Dot விருது

அனைத்து தொழில்முறை வடிவமைப்புக்கான உலகளவிய ரீதியிலான போட்டியில், Red Dot Design விருதுகள் அமைப்பானது, 60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, அதன் நடுவர் குழாமின் பரிசீலனைக்காக ஆயிரக்கணக்கான சமர்ப்பிப்புகளை பெறுகின்றது. பாரம்பரியமானதும் விண்வெளி சார் நேர்த்தியான வடிவமைப்பு, எதிர்கால வளர்ச்சியுடன் இணைந்த OPPO Find X3 Pro ஆனது, நடுவர்களின் கவனத்தை ஈர்த்ததன் மூலம் Red Dot தயாரிப்பு வடிவமைப்பு 2021 (Product Design 2021) விருதை வென்றுள்ளது.

உலகளாவிய ரீதியில் Find X3 Pro தனது தனித்துவமான தோற்றத்தின் அடையாளத்தை பெறுவதற்கு, முன்னோடியான  பொறியியல் உள்ளீடும் ஒரு காரணமாக அமைகின்றது. பார்ப்பவரை ஈர்க்கும் அதன் பின்பக்கமானது, நேர்த்தியானதும் தனியானதுமான ஒரு கண்ணாடியிலிருருந்து வடிவமைக்கப்பட்டு, தொடர்ச்சியான, விளிம்பற்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அத்துடன் அதன் மெல்லிய சட்டகமானது, முன்னோடியான வலு, கெமரா, மின்கலத்தை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

நீண்டகால நிலைப்பிற்காக வடிவமைக்கப்பட்ட, Find X3 Pro ஆனது, மிக மெலிதான மற்றும் பாரம் குறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. 8.26 மிமீ தடிப்பத்தையும் 193 கிராம் எடையையும் கொண்ட இது, சட்டைப் பைக்குள் எளிதில் செல்வதோடு, இடையூறின்றி கைகளிலும் தவழ்கிறது. அத்துடன், IP68 நீர் மற்றும் தூசிகளுக்கான எதிர்ப்புத் தன்மையையும் இது கொண்டுள்ளது.

கறுப்பு நிற (Gloss Black) Find X3 Pro கையடக்கத் தொலைபேசியானது, மிதமானதும், உன்னதமானதுமான நேர்த்தியின் சாரம்சமாகும். அதன் உயர் ரக போசிலான் கண்ணாடியானது, ஒளியை வளைத்து, கையடக்கத் தொலைபேசியில் நேர்த்தியான கோணங்களை உருவாக்குவதன் மூலம் மேலும் அழகூட்டும் அதே நேரத்தில், செரமிக் போன்ற பூச்சு ஆனது, உயர் வகை தோற்றத்திற்கான உண்மையான கறுப்பு நிறத்தை, ஈடு இணையற்ற வகையில் கண்ணாடியில் உருவாக்குகிறது. Find X3 Pro ஆனது நீல நிறத்திலும் கிடைக்கிறது. இது ஒரு கண்ணை கவரும் மெட் பூச்சு, 85% ஒளிபுகா நிலையுடன் ஆக்கப்பட்டிருக்கும். இரு நிற தொனியுடன், பளபளப்பான வகையில் அமைப்புடன், அதன் உயர் தர கெமராவைச் சூழ்ந்த பகுதிக்கு மேலும் அழகு சேர்ப்பதோடு, சிறந்த தோற்றம் மற்றும் தொட்டு உணரக்கூடிய வகையிலான மாறுபாட்டையும் உருவாக்குகிறது.
OPPO Find X3 Pro பற்றிய மேலதிக விரிவான தகவல்களுக்கு: www.oppo.com/en/smartphone/series-find-x/find-x3-pro இனை அணுகவும்.
Red Dot Design Awards பற்றிய மேலதிக தகவல்களுக்கு : https: // www.red-dot.org

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.
2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Add new comment

Or log in with...