2021 A/L: ஒக்டோபர் 04; தரம் 5: ஒக்டோபர் 03; 2021 O/L: 2021 ஜனவரியில்

2021 A/L: ஒக்டோபர் 04; தரம் 5: ஒக்டோபர் 03; 2021 O/L: 2021 ஜனவரியில்-GCE AL-Oct 04-30-Grade 05 Oct 03-GCE OL-End of January

- இன்று முதல் 10 நாட்களுக்கு பாடசாலை விடுமுறை

இவ்வருடம் இடம்பெறும் க.பொ.த. உயர் தரம், சாதாரண தரம், தரம் 5 பரீட்சைகளின் திகதிகளை கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதற்கமைய,  கொவிட்-19 பரவல் காரணமாக, பாடசாலைகளின் பாடத்திட்டத்தை முழுமையாக உள்ளடக்குவது கடினமாகியுள்ள நிலையில், வழமையாக ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் க.பொ.த. உயர் தரப் பரீட்சை, டிசம்பரில் இடம்பெறும் சாதாரண தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டள்ளதாக, அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று (09) பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய

  • 2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை: ஒக்டோபர் 04 - 30
  • தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை: ஒக்டோபர் 03 ஞாயிற்றுக்கிழமை
  • 2021 க.பொ.த. உயர் தரப் பரீட்சை: 2022 ஜனவரி கடைசி வாரத்தில்

கொவிட்-19 பரவல் காரணமாக, பாடசாலைகளின் பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வது கடினமாகியுள்ளதாக தெரிவித்த அவர், வழமையாக ஒரு பாடசாலை வருடத்திற்கு 200 நாட்கள் நடைபெறும். ஆனால் இவ்வாண்டு சுமார் 150 நாட்களாகவும், மேல் மாகாணத்தில் 130 நாட்களாக மேலும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த இடைவெளியை குறைக்க ஒன்லைனில் முறை மூலம் எதிர்பார்த்த போதிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இணைய வசதிகள் இல்லாமையானது அதற்கான ஒரு தடையாக அமைந்துள்ளது.

அதற்கமைய மிகவும் அவதானத்துடன் கலந்துரையாடி இம்முடிவுக்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தாண்டு மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறைக்காக, அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) முதல் 10 நாட்களுக்கு ஏப்ரல் 19ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...