கிழக்கு மாகாண பூப்பந்தாட்டபோட்டியில் காரைதீவு வீரர் சாதனை! | தினகரன்

கிழக்கு மாகாண பூப்பந்தாட்டபோட்டியில் காரைதீவு வீரர் சாதனை!

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காரைதீவு வீரவீராங்கனைகள் சாதனை புரிந்துள்ளனர்.

மாகாணப்போட்டி ஆரையம்பதி உள்ளக பூப்பந்தாட்ட அரங்கில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. 120ஆண்பெண் போட்டியாளர்கள் சகல வயதுமட்டங்களிலும் இத்திறந்தபோட்டியில் திருமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட வீரவீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டிகளில் நான்கு பிரிவுகளில் காரைதீவு வீரவீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனைபடைத்தனர். திறந்த பெண் போட்டிகளிலும் 17வயதுக்குட்பட்ட ஆண்போட்டிகளிலும் முதலிரு இடங்களை சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.

பிரதமஅதிதியாக த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

மட்டு.மாவட்ட விளையாட்டுஅதிகாரி வி.ஈஸ்வரன் உள்ளிட்ட அதிதிகளும் கலந்துசிறப்பித்தனர்.

(காரைதீவு குறூப் நிருபர் )


Add new comment

Or log in with...