ட்ரம்ப் வீடியோவை அகற்றியது பேஸ்புக் | தினகரன்

ட்ரம்ப் வீடியோவை அகற்றியது பேஸ்புக்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகள் லாரா ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த ட்ரம்பின் வீடியோ ஒன்றையும் பேஸ்புக் அகற்றியுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை அடுத்து கடந்த ஜனவரி மாதம் சமூக ஊடகமான பேஸ்புக் ட்ரம்புக்கு தடை விதித்தது.

இந்நிலையில் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பங்களிப்புச் செய்து வரும் லாரா ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்புடன் பல்வேறு விடயங்கள் பற்றி பேட்டி கண்டிருந்தார்.

அந்த வீடியோ பேஸ்புக்கில் போடப்பட்ட நிலையில், ட்ரம்புக்கு உள்ள தடை காரணமாக அவருடன் உரையாடும் வீடியோ நீக்கப்படுவதாக பேஸ்புக்கிடம் இருந்து லாரா ட்ரம்புக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பேஸ்புக் தவிர ட்விட்டர், யூடியுப், இன்ஸ்டாகிராம் என பல சமூக ஊடகங்களும் ட்ரம்புக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...