கொவிட்-19 தடுப்பூசி முதலாவது டோஸ் வழங்கல் இடைநிறுத்தம்

கொவிட்-19 தடுப்பூசி முதலாவது டோஸ் வழங்கல் இடைநிறுத்தம்-Issuing 1st Dose of Covisheild Vaccine Temporarily Stopped-Epidemiology Unit

- கையிருப்பை இரண்டாவது டோஸ் வழங்க நடவடிக்கை
- COVAX திட்ட இலவச தடுப்பூசி கிடைத்ததும் மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் (Oxford Astrazeneca Covishield) தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஜை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதால், ஏற்கனவே முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு அதனை உரிய நேரத்தில் வழங்க வேண்டியுள்ளதால், இவ்வாறு முதலாவது டோஸ் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பு, UNICEF, Gavi, CEPI ஆகியன இணைந்து இலவசமாக வழங்கும் கொவிட்-19 தடுப்பூசி திட்டமான COVAX (கொவெக்‌ஸ்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், அது கிடைத்தவுடன் மீண்டும், முதலாவது டோஸ் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக, சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் தற்போது வரை 923,954 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...