இலங்கையின் முதலாது SUPERBOX.lk ஒன்லைன் சூப்பர்மார்க்கெட் அறிமுகம் | தினகரன்

இலங்கையின் முதலாது SUPERBOX.lk ஒன்லைன் சூப்பர்மார்க்கெட் அறிமுகம்

இலங்கை முழுவதிலும் உள்ள வீடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, நாட்டின் முதலாவது ஒரு முனையிலிருந்து மற்றைய முனைக்கு ஒருங்கிணைந்த முழுதான சேவை. பலசரக்கு விற்பனை அம்சத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒன்லைன் பல்பொருள் அங்காடி, நாடளாவிய ரீதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. பலசரக்குப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை விரைவாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் தமது வீட்டு வாசலுக்கே வந்து வழங்க இந்த சேவை வழிவகுக்கிறது. புதிய, குளிர்ந்த, உறைந்த, உலர் வகை பொருட்கள் உள்ளிட்ட, பரந்துபட்ட தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க SUPERBOX உதவுகிறது.

உயர்தரமானதும், விரைவானதும், நம்பகமானதுமான ஒன்லைன் பல சரக்கு கொள்வனவு மற்றும் விநியோக சேவைகளுக்கான இன்றைய தேவையை ஈடு செய்யும் வகையில, நாட்டின் இரண்டு பிரபல வரத்தகர்களால், SUPERBOX ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எவ்வித தரகீடும் இன்றி, (‘End to End’) சூப்பர்மார்க்கெட் எண்ணக்கருவின் தன்மைக்கு ஏற்ப, SUPERBOX ஆனது, கொள்முதல், விலை நிர்ணயம், தயாரிப்புத் தெரிவு முதல் வீட்டு விநியோகம் வரையான அனைத்து சேவைகளினதும் ஒவ்வொரு அம்சத்திலும் தனது கவனத்தை செலுத்துகிறது.

நாட்டின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும், இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் (SLRA) முன்னாள் தலைவருமான சிதத் கொடிகார, Kapruka.com இன நிறுவனர் துலித் ஹேரத்துடன், SUPERBOX ஆனது, பரந்த அளவிலான புதிய பொருட்களையும், குளிர்ந்த, உறைந்த, உலர்ந்த வகை பொருட்களை வழங்குகிறது. ஒரு பண்டகசாலை முகாமைத்துவ தொகுதி, உலகத் தரம் வாய்ந்த ERP தீர்வுகள், உயர்மட்ட இலத்திரனியில் வர்த்தக தளம் மற்றும் தொழில்துறை நிபுணத்துவ தொழில்முறை அமைப்புகளின், இணையற்ற இறுதி மைல்கல் வரையான விநியோகம் மூலம் பலப்படுத்தப்பட்ட SUPERBOX ஆனது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு திட்டமிட்டுள்ளது.


Add new comment

Or log in with...