ஒற்றைப் பயன்பாட்டு, குறுகிய பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒற்றைப் பயன்பாட்டு, குறுகிய பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை-Ban Imposed on Three Types of Single-Use Plastic With Effect Mar 31

- நாளை முதல் அமுலுக்கு வருகிறது

ஒற்றை பயன்பாட்டு மற்றும் குறுகிய கால பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கான தடை நாளை (31) முதல் அமுலாகின்றது.

குறித்த தடை அமுலுக்கு வரும் தினம் மற்றும் தடை செய்யப்படும் பிளாஸ்டிக் வகைகள் தொடர்பில், சுற்றாடல் அமச்சர் மஹிந்த அமரவீரவினால் கடந்த ஜனவரி 21ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒற்றைப் பயன்பாட்டு, குறுகிய பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை-Ban Imposed on Three Types of Single-Use Plastic With Effect Mar 31

அதற்கமைய தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்

  • ஏதேனுமொரு செயற்பாட்டிற்காக அல்லது வியாபாரம் அல்லது கைத்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விவசாய இரசாயன பொருட்களைப் பொதியிடுவதற்கான பொலி எதிலீன் டெரெப்தாலேட் (PET) அல்லது பொலிவைனல் குளோரைட்டு (PVC)
  • ஏதேனுமொரு செயற்பாட்டிற்காக அல்லது கைத்தொழிலில் பயன்படுத்தப்படும்...
  1. உணவுகள், மருந்துகள் தவிர்ந்த, 20 மி.லீ. அல்லது 20 கிராமிற்கு குறைவான அல்லது அதற்கு சமமான சிறு பிளாஸ்டிக் பொதிகள் (Sachets - சசே)
  2. காற்றடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் (பலூன்கள், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய/ நீர் விளையாட்டுக்கான துணைப் பொருட்கள் தவிர்ந்த நீரில் விளையாடக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்)
  3. பிளாஸ்டிக் குச்சியினாலான காது துடைப்பான்கள் (மருத்துவ/ நோய்கள் தொடர்பான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காது துடைப்பான் தவிர்ந்த)
PDF File: 

Add new comment

Or log in with...