டிப்பருடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தை, 2 மகன்கள் பலி

டிப்பருடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தை, 2 மகன்கள் பலி-Accident-Father & 2 Sons Killed-Palai-Kilinochchi

- பளையில் கோர விபத்து

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவிலில் இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு மகன்களும் பலியாகியுள்ளனர்.

விபத்து நடந்த சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கியவாறு கார் காணப்படுவதாகவும் அதற்கு நேரெதிரே டிப்பர் வாகனம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிப்பருடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து தந்தை, மகன்கள் பலி-Accident-Father & 2 Sons Killed-Palai-Kilinochchi

வீதியை விட்டு விலகிய டிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர்.

விபத்தில் பளை தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு. அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துளார்

(பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன்)


Add new comment

Or log in with...