கிராண்ட்பாஸ், கஜிமா வத்தை தீ விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நல்ல தீர்வு

கொழும்பு, கிராண்ட்பாஸ் கஜிமா வத்தை பகுதியில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.  

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டபோதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.  

இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்டவற்றுடன் அரசாங்கம் கலந்தாலோசித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.  

கடந்த 15 ஆம் திகதி கஜிமாவத்தை பகுதியில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் அப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தன. தற்போது அங்குள்ள மக்கள் தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  


Add new comment

Or log in with...