ரோஹித குணவர்தன இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை

ரோஹித குணவர்தன இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை-Rohitha Abeygunawardena Released From Bribery Case

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) குறித்த உத்தரவை வழங்கியது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அவரால் சம்பாதிக்க முடியாத வகையிலான ரூ. 414 இலட்சம் சொத்தை கொண்டுள்ளமை, அதனை சம்பாதித்தது எவ்வாறு என்பதை வெளிப்படுத்தாமை தொடர்பில், இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த வழக்கை, தொடர்ந்தும் தொடர விரும்பவில்லை என, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் ரோஹித குணவர்தனவை விடுவிப்பதாக, கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தது.


Add new comment

Or log in with...