அசோக் அபேசிங்கவிடம் 5 மணித்தியால வாக்குமூலம்

அசோக் அபேசிங்கவிடம் 5 மணித்தியால வாக்குமூலம்-Ashok Abeysinghe Given 5 Hour Statement to the CID

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, குற்றப் புலனாய்பு பிரிவில் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக அவர் கூட்டமொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முறைப்பாடு தொடர்பல், அசோக் அபேசிங்கவை கடந்த மார்ச் 08, 09ஆம் திகதிகளில் வாக்குமூலம் வழங்க சிஐடியில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (11) முற்பகல் 9.30 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.

அவருடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோர் அவருடன் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...