ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை; ஐவர் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை; ஐவர் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு-AG Directs to Probe 5 Suspects Named in Easter Sunday Attack PCoI Report

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐவர் தொடர்பில் விசாரணை செய்யுமாறு, பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அபூ ஹிந்த், லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ், றிம்சான், சாரா ஜெஸ்மின் ஆகியோர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மாஅதிபர் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நெளபர், மொஹமட் அன்வர் மொஹமட் றிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாத்து மொஹமட் ஆகிய இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களம் (Department of Justice) பயங்கரவாத குற்றச்சாட்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...