6,000 வாள்கள்: கர்தினாலின் மனு; விசாரணைகளை முன்னெடுக்க பணிப்பு

6,000 வாள்கள்: கர்தினாலின் மனு; விசாரணைகளை முன்னெடுக்க பணிப்பு-AG Directs IGP to Conduct Investigation-6000 Sword-Cardinal Malcolm Ranjith

வாள்கள், கூரிய ஆயுதங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு, சட்ட மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்து மூல முறையீட்டு மனுவுக்கமைய, பொலிஸ் மாஅதிபருக்கு இப்பணிப்புரையை விடுத்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப் பகுதியில் நாட்டிற்குள் 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்குள் 6,000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த மனு கடந்த மார்ச் 05ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜூன ஒபேசேகர, மாயாதுன்ன கொரேயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவை ஆராய்வது எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...