கடத்தப்பட்டதாக தெரிவித்த கானியா பெனிஸ்டருக்கு குற்றப்பத்திரம் | தினகரன்

கடத்தப்பட்டதாக தெரிவித்த கானியா பெனிஸ்டருக்கு குற்றப்பத்திரம்

கடத்தப்பட்டதாக தெரிவித்த கானியா பெனிஸ்டருக்கு குற்றப்பத்திரம்-Swiss Embassy Garnier Banister Francis Indicted

தான் கடத்தப்பட்டதாக, பொய்க் குற்றச்சாட்டு சுமத்திய சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் இற்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (09) குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டது.

இதன்போது, சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம், குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி, சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர், ஒரு குழுவினரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 2019 நவம்பர் 16ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டதோடு, பின்னர் நவம்பர் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...