இலங்கையை வந்தடைந்தது 2,64,000 ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி

நேற்று அமைச்சர் சுதர்சனியால் பொறுப்பேற்பு

கொவெக்ஸ் சலுகையின் கீழ் இலங்கைக்கு மேலும் 2 இலட்சத்து 64.000 ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகள் நேற்று கிடைத்துள்ளன. யுனிசெப் நிறுவனத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ள மேற்படி தடுப்பூசியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை மேற்படி தடுப்பூசியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை இராஜங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே பொறுப்பேற்றுள்ளார்.

விமானத்தின் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டுள்ள மேற்படி தடுப்பூசி விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு அங்குள்ள குளிரூட்டப்பட்ட பொருட்கள் களஞ்சிய சாலையில் களஞ்சியப்படுத்த பட்ட பின்னரே சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவிக்கையில்; கொவெக்ஸ் சலுகையின் கீழ் இலங்கைக்கு இலவசமாக 2 இலட்சத்து 64 ஆயிரம் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது தேவையான அளவு தடுப்பூசிகளை நாம் கொள்வனவு செய்வோம்.அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். கொவெக்ஸ் சலுகை மூலம் கிடைக்கும் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கே வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங் களுக்கு முன்னுரிமையளிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகளவு கேள்விகள் உள்ள போதும் முறையாக திட்டமிடப்பட்ட செயற்திட்டத்தின் மூலமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது எத்தகைய பிரச்சினைகளும் ஏற்படாது. அது தொடர்பில் எவரும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நாம் போதியளவு தடுப்பூசிகளை கொள்வனவு செய்வோம்.

இது புதிய வகை தடுப்பூசி புதிதாக தயாரிக்கப்பட்டவை. இதற்கு கொள்வனவுக்கு மிஞ்சிய கேள்வி அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முறையாக முன்னெடுத்துச் செல்கின்றது. கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் அதற்கான செயற் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பெயர் விபரங்களை பெற்றுக்கொண்டு 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் இராஜாங்கஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...