6,000 வாள்கள் இறக்குமதி; பேராயரின் மனு மீதான விசாரணை மார்ச் 31இல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்குள் 6,000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இம் மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜூன ஒபேசேக்கர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிலவரம் என்னவென பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்

மாஅதிபரிடம் வினவி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதியளிக்குமாறு சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இதன்போது தெரிவித்துள்ளார்.

நேற்றைய விசாரணையின் போது, பேராயர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன, சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

இதன்படி மனுமீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...