- இன்று 10 ஜனாஸாக்களை அடக்க ஏற்பாடு
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்து வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்களின் முதலாவது நல்லடக்கம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மாநகர் பகுதியில் அமைந்துள்ள காணியிலே இந்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று பிற்பகல் 4.00 மணி வரை இரு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
கொவிட் தொற்றினால் மரணமடைந்த, மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாஸா, ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, இன்றைய தினம் பத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாஸாக்களை அடக்கும் பகுதிற்குள் யாரும் செல்லாத வகையில் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்துக்குள் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை தினகரன் நிருபர் - எச்.எம்.எம். பர்ஸான், கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம். முர்ஷித், மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்))
Add new comment