Sputnik V ரஷ்ய தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி | தினகரன்

Sputnik V ரஷ்ய தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி

Sputnik V ரஷ்ய தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி-Expert pannel of the NMRA approves the emergency use of Russian Sputnik V vaccine in SL

'ஸ்புட்னிக் வீ' (Sputnik V) ரஷ்ய கொவிட்-19 தடுப்பூசியை இலங்கையின் அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விசேட நிபுணர் குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில், ஏற்கனவே ஒக்‌ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசியானது தற்போது இலங்கையில் வழங்கப்பட்டு வருவதோடு, இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு அதன் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...