தேங்காய்கள் சேகரித்தல், ஏற்றுமதி செய்தல் நிலையம் திறப்பு | தினகரன்

தேங்காய்கள் சேகரித்தல், ஏற்றுமதி செய்தல் நிலையம் திறப்பு

தேங்காய்கள் சேகரித்தல், ஏற்றுமதி செய்தல் நிலையம் திறப்பு-Commander Security Force Jaffna Declared Open the Coconut Collecting and Export Centre

Tropical Green Erports (pvt) Ltd நிறுவனத்தினால்  தேங்காய்கள் சேகரித்தலும் ஏற்றுமதி செய்தலும் மற்றும் தும்பு உற்பத்தி செய்தலுக்கான கிளைநிறுவனமொன்று யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழ் பகுதியில் அந்நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷெஹான் அரசரதத்தின் பூரண அனுசரணையின் கீழ் அமைக்கப்பட்டு யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேங்காய்கள் சேகரித்தல், ஏற்றுமதி செய்தல் நிலையம் திறப்பு-Commander Security Force Jaffna Declared Open the Coconut Collecting and Export Centre

முகாமைத்துவ பணிப்பாணர்ஷெஹான் அரசரதம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறானதொரு கிளைநிறுவனமானது பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வேண்டுகோளுக்கமையவே யாழ்ப்பாணப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது என்றும் குறித்த திட்டமிடலினை செயற்படுத்துவதற்கான அனைத்து விதமான உதவிகளினையும் யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேங்காய்கள் சேகரித்தல், ஏற்றுமதி செய்தல் நிலையம் திறப்பு-Commander Security Force Jaffna Declared Open the Coconut Collecting and Export Centre

இதன் மூலம் நாட்டினுடைய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடிவதுடன் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கவும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்வில் 52ஆவது தரைப் படைப் பிரதேசத்தின் கட்டளைத் தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், நிறுவுனர் ஷெஹான் அரசரதம் மற்றும் அவரது குடும்பத்தினரும் குறித்த உற்பத்தி நிறுவனத்திற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட தொழில்பெறுனர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Add new comment

Or log in with...