இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியில்தொழில் பயிற்சி நிறுவனம் மீண்டும் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை செய்துள்ளது. இலங்கை இந்திய சமுதாய பேரவையுடன் இணைந்து மலையக இளைஞர் யுவதிகள் 130பேருக்கு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கியுள்ளது. பத்திக், பின்னல் வேலைப்பாடுகள், எம்ய்டரோடிங் போன்ற தொழிற்பயிற்சிகளை வழங்கியதன் மூலம் இந்த யுவதிகள் வீடுகளில் இருந்தபடியே சுயதொழில்களை மேற்கொண்டு வருமானத்தை பெற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏழு நாட்கள் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் எளிமையான முறையில் கற்கை நெறிகள் வழங்கப்பட்டுள்ளதால் பயிற்சிபெற்ற 130யுவதிகளுமே பயன்பெற தகுதியுடையவர்கள்.
காங்கிரஸின் கனவுக்கூடமாக உருவாக்கம் பெற்று நீண்டகாலமாகவே பல்வேறு தொழில்நுட்ப வகுப்புகள் நடாத்தி வருவதால் மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயத்தொழில் பயிற்சிகளை காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிலையம் வழங்கியுள்ளது.
Add new comment