டுபாயில் நடைபெற்ற 2021 உலக பரா தடகள Grand Prix போட்டி | தினகரன்

டுபாயில் நடைபெற்ற 2021 உலக பரா தடகள Grand Prix போட்டி

டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக பரா தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற டுபாய், ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெப்ரவரி 6 முதல் 14 வரை இடம்பெற்ற Grand Prix 2021 உலக பரா தடகள தகுதி காண் போட்டிகளில் கலந்துக்கொண்ட இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு வலுவூட்டியது.

இந்த அணிக்கு F64 (med cate) ஜாவெலினில் போட்டியிடும் சம்பத் ஹெட்டியாராச்சி தலைமை தாங்கியதுடன் F46 ஜாவெலினில் காமினி ஏகநாயக்க, (T47) 400M இல் மதுரங்க சுபசிங்க, பாலித பண்டார (F42) Shot Put இல் குமுது பிரியங்க (TF45/46) நீளம் பாய்தல் மற்றும் 100M, TF46 நீளம் பாய்தல் மற்றும் 100M இல் இந்துமதி கருணாதிலக ஆகியோர் கலந்து கொண்டனர்.

2021 உலக பரா தடகள Grand Prix இல் இலங்கை அணி பதக்கங்களைப் பெற்றால், 2021 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர்கள் தகுதி பெறுவார்கள். 134 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் டோக்கியோ விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்கனவே மூன்று இலங்கை பரா விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளுக்கு நிதியுதவி வழங்கியதில் டயலொக் ஆசிஆட்டா பெருமிதம் கொள்கிறது. ஜனாதிபதியின் தங்கக் கோப்பை கைப்பந்து, தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் நெட்பால் போட்டிகள், கிளப் ரக்பி, பிரீமியர் கால்பந்து, பள்ளிகளின் கிரிக்கெட், ஜூனியர் கைப்பந்து மற்றும் பராலிம்பிக் விளையாட்டுகளுடன் இந்த நிறுவனம் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது - அதே நேரத்தில் இராணுவ பரா விளையாட்டு, தேசிய பரா விளையாட்டு மற்றும் விளையாட்டு ஒலிம்பிக் மற்றும் உலக பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணியின் அனுசரணையாளராகவும் திகழ்கின்றது.


Add new comment

Or log in with...