சுகாதாரத் துறையின் பரிந்துரைகளுக்கு இணங்காத தனியார் பஸ்களுக்கு அபராதம் | தினகரன்

சுகாதாரத் துறையின் பரிந்துரைகளுக்கு இணங்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரால் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்காத தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்க புதிய முறை ஒன்றை மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் இ.போ ச மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடலாென்று நேற்றுமுன்தினம் (25) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் .

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தை ஓரிரு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இருக்கைகளின் எண்ணிக்கையை மட்டுமே பஸ்களில் பயணிகள் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அரசாங்கம் பஸ் கட்டணத்தை 20% அதிகரித்த போதிலும் சில பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இதன்பாேது தெரிவிக்கப்பட்டது.

இ.போ.ச மற்றும் தனியார் துறை இரண்டுமே பொதுவான கால அட்டவணையின்படி பஸ்களை இயக்க வேண்டும். எனினும் ஆளுநர் பல சந்தர்ப்பங்களில் பரிந்துரைத்திருந்தாலும், அது செயற்படுத்தப்படவில்லை என இதன்​போது மாகாண ஆளுநரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன்படி, மாகாணத்தில் ஒரு பொதுவான கால அட்டவணையின்படி தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களை இயக்குவதில் சிக்கல்களை அடையாளம் காண போக்குவரத்து அமைச்சின் மாகாண செயலாளர் உபலி ரணவக்க தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

எம்.ஏ.அமீனுல்லா
 


Add new comment

Or log in with...